வெளிநாடுகளில் இருந்து அரசாங்கத்தின் அனுமதி இன்றிஇலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

06.04.2021 08:28:56

 

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அரசாங்கத்திடம் அனுமதிப் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு மீள வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைய நாட்டிற்குள் வரும் பயணிகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சகம் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என 2020 மார்ச் மாதத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்  கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.