ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஆராயும் அமைச்சரவை துணைக்குழு - ஈஸ்டர் தாக்குதல்

22.02.2021 07:55:42

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ள உண்மைகளையும் பரிந்துரைகளையும் ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இந்த அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.