சுத்தத்தைப் பேணி, கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் சிரமதானப்பணி !

07.04.2021 09:14:10

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் சுற்றுப் புறச்சூழலின் சுத்தத்தைப் பேணி, கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் சிரமதானப்பணி இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இம்முறை சாதரணப் பரீட்சைக்குத் தோற்றிய (2020ம் ஆண்டு) மாணவர்களால் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் மேற்பார்வையில் இடம்பெற்ற இச்சிரமதானப் பணியில் வகுப்பறைச் சூழலிலும், பாடசாலை வளாகத்திலும் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இப்பணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றல் பணியாளர்களும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

தாமாக முன்வந்து முன்மாதிரிமிக்க இப்பணியை மேற்கொண்ட இம்முறை க.பொ.த சாதரணப் பரீட்சைக்குத் தோற்றிய (2020ம் ஆண்டு) மாணவர்கள், இதற்கான ஒழுங்கமைப்பினை மேற்கொண்ட பாடசாலையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குழு பொறுப்பாசிரியர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர், சுகாதாரப் பிரிவினர், திண்மக்கழிவகற்றல் ஊழியர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் அதிபர் ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் நன்றி தெரிவித்தார்.