யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்

26.02.2023 18:33:21

NorthernUni மற்றும் SLIIT யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த வளாகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பில்  NorthernUni நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

MAGICK குழுமம் ஆனது கல்விக்கு வித்திடும் முகமாக யாழ்ப்பாணத்தில் NorthernUni இனை ஆரம்பிப்பதில் பெருமை கொள்கிறது.

இலங்கையினுடைய மிகப்பெரிய அரச சார்பற்ற பட்டப் படிப்பினை வழங்குகின்ற நிறுவனமான SLIIT இனுடைய கூட்டமைவானது NorthernUni ஊடாக இலங்கையின் பிரபல்யமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவக் கற்கைகளை யாழ் மண்ணில் வழங்கவிருக்கிறது.

நாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில்?

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டில் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதமானது அதிகமாக காணப்படுகிறது.

கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்ககளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர் சேர்க்கை ஒப்பிட்டு அளவில் குறைவாக உள்ளது.

2018 தொடக்கம் 2020 வகையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கூட்டு வருடாந்த வளர்ச்சி வீதமானது முறையே 30% மற்றும் 40% மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இக்கூற்றானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வளம் மற்றும் அபிலாசைகளை சுட்டிக்காட்டுகிறது. இதனோடு மேம்பட்ட பொருளாதார சூழல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நிலப்பரப்பு, கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் தொழில்களை தொடர மாணவர்களின் அபிலாசைகள் அதிகரித்துள்ளது.

எப்படியிருப்பினும், அரச பல்கலைக்கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான உள்வாங்கல்களை கொண்டிருப்பதால் உயர் தகுதி வாய்ந்த அதிகளவான மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்துடன் உயர்கல்வி வாய்ப்புகளை அணுக முடியாது உள்ளது.

2020 ஆம் ஆண்டின் புள்ளிவிபரம் இதற்கான கதைகளை விவரிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெறுமனே 200 மாணவர்கள் மாத்திரமே அரச பல்கலைக்கழகங்களில் கணினி விஞ்ஞானம் - தகவல் தொடர்பாடல் தொழில் சிறப்பு பட்டங்களை பயில முடியும்.

ஆனால், அனைத்து மாணவர்களையும் NorthernUni அங்கீகரித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் மற்றும் நேரடி அனுமதி பெற்ற SLIIT இனுடைய நான்கு வருட பட்டப் படிப்புகளை யாழ்ப்பாணத்தில் வழங்குகிறது.

யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் இதன் வளாகமானது அமைந்துள்ளது. NorthernUni ஆனது தகவல் தொழில்நுட்ப கற்கையின் 7 சிறப்பு பட்டங்களையும், வணிக முகாமைத்துவத்தின் 4 சிறப்பு பட்டங்களையும் வழங்குகிறது