ஐரோப்பிய ஒன்றியம் 8.26 பில்லியன் ரூபா நிதியுதவி

15.01.2021 09:00:55

ஐரோப்பிய ஒன்றியம் 35.75 மில்லியன் யூரோ (ரூ. 8.26 பில்லியன்) பெறுமதியான மூன்று நிதியுதவித் திட்டங்களில் கைசாத்திடுவதாக நேற்று அறிவித்தது, இது இலங்கையின் நீதித் துறையை ஆதரிக்கவுள்ளதுடன் , உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும்.

இது தொடர்பான உடன்படிக்கையானது திறைசேரியின் செயலாளரான எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சாய்பிக்கு ஆகியோருக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் நீடிக்கப்பட்ட இலங்கைக்கு தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு , மிகவும் நல்லுறவு மற்றும் ஆதரவைப் பாராட்டிய திறைசேரி செயலாளர், இந்த நிதியுதவிகள் நீதித்துறையை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் மற்றும் உணவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.