மக்கள் செல்லாதமையினால் வெறிச்சோடிய மெரினா கடற்கரை

18.04.2021 10:52:35

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு  வெளியிட்ட ஊடக அறிக்கையில், மெரினா கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாதமையினால் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டன.

அதேபோன்று 2ஆவது வாரமான நேற்றும் இன்றும் கூட மெரினா கடற்கரைக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள காமராஜர் சாலையில் மாத்திரம் மக்கள் நடந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடற்கரைக்குள் எவரும் நுழையாதவாறு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.