மத்திய அரசின் அறிவிப்பு போலியானது – மம்தா பானர்ஜி

03.06.2021 09:52:44

 

இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”பீகார் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொவிட் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை.

அதுபோலதான் அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி என்ற அறிவிப்பும் போலியானது. இரண்டு டோஸ்களுக்கு உள்ள இடைவெளியின் அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க ஓராண்டுக்கு மேல் ஆகும்.

தடுப்பூசிகளுக்காக மேற்கு வங்க அரசு இதுவரை 150 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. ஆனால் 10 கோடி மக்கள் தொகையில் 1.4 கோடி பேருக்கு மட்டும் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளிக்கும் குறைந்த அளவிலான தடுப்பூசிகள் சில நாட்களில் தீர்ந்துவிடுகின்றன. மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.