ஓற்றையாட்சி பெருந்தோல்வி ; கூட்டாட்சி அல்லது சமஷ்டியே உகந்த தீர்வு புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்மக்கள் தேசிய கூட்டணி யின் யோசனை

08.04.2021 09:41:17

தற்போது நடைமுறையிலுள்ள ஓற்றை ஆட்சி முறையை கைவிட்டு கூட்டு சம்மேளன  முறைமையிலான  ஏற்பாட்டை உள்ளீர்த்துக்கொள்ளுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யோசனை தெரிவித்திருப்பதுடன் இந்த  சமஷ் டி முறைமையில் இலங்கை நான்கு மாநிலங்களாக  இருக்க முடியுமென்றும்  சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பை  தயாரிக்கும் நிபுணர் குழுவை நேற்று புதன்கிழமை  சந்தித்தபோது இந்த  யோசனையை முன்வைத்திருக்கும்வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்  யாழ் மாவட்டஎம்.பி.யான சி. வி. விக்கினேஸ்வரன்தலைமையிலான   தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் இந்த யோசனையில் ஓற்றையாட்சிமுறையில்  பன்மைத்தன்மையான சமூகங்கள் வாழும் நாட்டில்  ஸ்திரத்தன்மையையோ  பொருளாதார முன்னேற்ற்றத்தையோ ஏற்படுத்தமுடியாதென  உறுதியாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது.
நிபுணர் குழுவுடனான சந்திப்பு நேற்று புதன் கிழமை பண்டாரநாயக்க  சர்வதேச மாநாட்டு மண்ட பத் தில் இடம்பெற்ற து.   இச்சந்திப்பில் தமிழ்மக்கள் தேசிய  கூட்டணியின்  சார்பில் நீதியரசர் விக்கினேஸ்வரன், க. சுரேஷ் பிரேமச்சந்திரன் , கலாநிதி கே. சர்வேஸ்வரன்.எம். கே . சிவாஜிலிங்கம் , அனந்தி சசி தரன் , செல்வேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒரு மிகப்பெரிய பேரழிவு என்பதை நிரூபித்துள்ளது
அது  விரைவில் கைவிடப்பட வேண்டும்.தமிழர்கள் என்ற வகையில், ஜனநாயகத்தின் பேரில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு எண்ணிக்கையில்பெரும்பான்மையினரான சிங்களவர்கள் மனிதாபிமானமற்ற முறையில், முரண்பாடாக எங்கள் அரசியல் உரிமைகளைப் எடுத்துக்கொள்ளவும் எங்களை அடிபணிய வைக்கவும் அனுமதித்துள்ளது என்று நாங்கள் உணர்கிறோம்
பிரெஞ்சு அரசியல் விஞ்ஞானிடோகியூவில்லே  (1805 – 1859)
எண்களின் அடிப்படையில்  ஆட்சி செய்வதற்கான உரிமைகோரலை அடிப்படையாகக் கொண்ட முடிவு, சரியானது அல்லது நேர்மையானது அல்லவெனகூறியுள்ளார்.எமது அரசியலமைப்பு தொடர்பான  தீர்மானத்தில் நாங்கள் நியாயம ற்று இருக்கமுடியாது.
”இலங்கையர்கள் என்ற வகையில், ஒற்றையாட்சி அரசியலமைப்பானது  சிங்களத்  தலைவர்கள் அடக்குமுறையான, பக்கச்சார்பான சிங்கள மேலாதிக்கத்தைதமிழர்கள்மீது மேற்கொள்வதற்கு
இந்நடவடிக்கைகள் நாட்டின் செல்வத்தை வீணடித்ததுடன்  அதன் பொருளாதார முன்னேற்றத்தையும்  பின்னடைவுகாணச்செய்துள்ளது இன்று
நாடு பரிதாபகரமானதும்  அபாயகரமான துமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாத நிலைமைக்குதள்ளப்பட்டுள்ளது.  இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி மாற்றீடு தீவிரமடைந்துள்ளது
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு
பேரழிவானது. இன்று  கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால்
சீனாவிலிருந்து பெறப்பட்டகடனுக்காக  நாட்டின் பல சொத்துக்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
வலுக்கட்டாயத்தின்கீழ்  முழு சுதந்திர உலகத்தையும் எதிர்த்து சீனாவின் கட்டளைகளுக்கு அமைவாகசெயற்படுவதாக  தென்படுகிறது.
இதன் விளைவாக
சர்வதேச அரங்கில் சுயாதீனமாகஅணிசேராதஅந்தஸ்தை இழந்துள்ளது.
நிலைமை உண்மையில் தீவிரமானது
அது ஒற்றையாட்சி என்பதை நாடு உணர வேண்டும்
தமிழர்களின் இழப்பில் சிங்கள மேலாதிக்கத்தை வென்றெடுப்பதற்கான  போர்வையில் நாட்டின் தவறான நிர்வாகத்திற்கு  அரசியலமைப்புஅனுமதிக்கிறது
தெற்கே செய்த தவறுகளுக்கு  வடக்கு மற்றும் கிழக்குவிலை  செலுத்துகின்றன. முழுநாட்டிலுமுள்ள
850 க்கும் மேற்பட்ட திணைக்களங்கள்  மற்றும் பிரதம மந்திரி அலுவலகம் உட்பட அமைச்சுக்களில்
வடக்கு மாகாண சபையில்நான் முதலமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் அலுவலகம்
2016 இல் நிதிமுகாமைத்துவதில் மு தலாவதாக இருந்தது.
வரலாறு இலங்கையை பல இன, பல மத, பல பலமொழிநாடாக  உருவாக்கியுள்ளது கடந்த காலத்தில்
சிங்கள மொழி பேசும் மக்கள் மற்றும் தமிழ் பேசும் மொழிபேசும்  சமூகம்என்று
இரண்டு தனித்துவமான பிரிவுகளாக மக்கள் தங்கள் சொந்த ராஜ்யங்களைக் கொண்டிருந்தனர்

அரசியலமைப்பு தயாரிப்பில், அது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கான
முதன்மையான  தார்மிக விடயமாக
, அனைத்து சமூகங்களையும் சமத்துவமாகவும் க வு ரவமாகவும் தொடர்ச்சித்தன்மை வாய்ந்தஒரு    ஒத்திசைவான அலகாகவும் ஒருங்கிணைப்பதற்கான  சூத்திரத்தைக் கண்டறிவதற்கான விடயமாகவுள்ளது.
இதன் மூலம் எண்ணிக்கையில் குறைவான ஏனைய
அனைத்து சமூகங்களுக்கும்
சமமான அந்தஸ்தும் கவுரவமும்  வழங்கப்படுகிறது, ஏனெனில் நிறம் அல்லது நம்பிக்கைகளில் வேறுபட்டதாகவும் ஓரங்கட்டப்பட்ட அல்லது பின்தங்கியதாக உணர்வதற்கு  ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது
ஓரங்கட்டப்பட்ட அல்லது பின்தங்கியதாக உணர்கிறார்கள், சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் மட்டுமே இதை அடைய முடியும்
ஐக்கிய அமெரிக்கா சுவிஸ் சம்மேளனம்  ரஷ்யா இன்னும்  பல நாடுகளில்இது  வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் யோசனையில்  நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளோம்
ஒரு பிரதமரின் கீழ் அமைச்சரவை
அரசாங்கத்தின் ஒரு நிறைவேற்றுகிளையாக  வருகின்றபோது , ஒரு  சமஷ்டி  அரசியலமைப்பு ஒரு
போதுமான ஏற்பாடாகஇருக்கும். நிறைவேற்ற திகார ஜனாதிபதிமுறைமை   தொடர்ந்தால்அந்த நிலைமையை கையாள்வதற்கு சம ஷ்ட்டி  அரசியலமைப்பு அவசியம், ஏனெனில்
நிறைவேற்றுஜனாதிபதியினால் பி  ரயோகிக்கப்படும்  அபரிமிதமான அதிகாரத்தில் , சம ஷ்டியானது
ஒரு பரவலாக்கப்பட்ட ஒற்றையாட்சிமுறைமையிலான  அரசாங்கத்திற்குமட்டுமே வழிவகுக்கும்என்பதுடன்  ஒரு ஸ்திரமானஅரசுக்கு   வழிவகுக்காது
. ஒரு கூட்டு சம் மேள ன  ஏற்பாட்டைத் தவிர வேறு எந்தவொரு ஏற்பாடும்
ஸ்திரத்தன்மையிலும்பார்க்க  ஸ்திரம ற்றதன்மைக்கும்  மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக்காட்டிலும் உறுதியற்ற தன்மைக்கானசெயல் முறையாகவும்  அமையும்
. ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் இனவாத  பதட்டங்கள்
பொருளாதார பின்னடைவுவுக்குஇட்டுச்செல்லக்கூடும்.எங்கள் கட்சி சமர்ப்பித்த யோசனைகளின்  அடிப்படையில் ஒரு கூட்டு சம்மேளனஅரசியலமைப்பொன்றை வென்றெடுக்க ஜனாதிபதியும் அவரின் அரசாங்கமும்  .தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தவேண்டுமென வலியுறுத்துவதற்கு  ஆணைக்குழுவின் நல்லெண்ணத்தை பயன்படுத்துமாறு  நாங்கள் வேண்டுகோள் விடுக் கிறோம்.
நாட்டின்  கடந்த காலவரலாற்றை   கவனத்தில் கொண்டு,
நாட்டில் நான்கு மாநிலங்கள் இருக்க வேண்டுமென்று  நாங்கள் முன்மொழிந்துள்ளோம்  அதாவது மூன்று முன்னாள் ராஜ்ஜ யங்களான
கோட்டே, கண்டி , யாழ்ப்பாணம் மற்றும் நான்காவது பாரிய  கொழும்பு தலைநகர
மாநிலம்ஆகியவையாகும்.. இலங்கை கூட்டுசம்மேளனம்  இந்த நான்கு மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.
முஸ்லிம்களும்மலையகத் தமிழர்கழும்  பெரும்பான்மையாகவாழும்பிராந்தியங்களுக்கு   தன்னாட்சி வழங்க வும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது  .மாநில அரசுகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒதுக்கீ டு செய்தல்உட்பட   பல விவரங்களை
எங்கள் சமர்ப்பிப்புகளில் நாங்கள் சேர்த்துள்ளோம்