நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா ?

08.04.2021 10:48:58

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதனிடையே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அந்த புகைப்படத்தின் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கண்ணன் இயக்கும், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அப்படத்தில் இவர் திருமணமான பெண்ணாக நடிக்கிறார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணமாகும் காட்சியை படமாக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.