அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

24.02.2023 16:21:24

உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் கருத்துக்களை பெறவும் 12 விதமான கருப்பொருள்களில், வரவுசெலவு திட்டத்துக்கு பிந்தைய இணையக் கருத்தரங்களை எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது.

முதல் நாளாக பசுமை வளர்ச்சி குறித்த இணையக் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்திக்கான தொழில்நுட்பத்தில் உலகிற்கு வழிகாட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளது எனவும் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் அமுல்படுத்துவதற்கு விரைவாக செயற்படவேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.