அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்

30.05.2021 12:20:33

சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக இயக்கும் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம்

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும்.

இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.