கப்பல் தீ திட்டமிட்ட தாக்குதல்; பேராசிரியர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு !

02.06.2021 09:08:31

 கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் கப்பலில் ஏற்பட்ட தீயானது திட்டமிட்ட சதியென பரபரப்பு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன சமூக வலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் இயற்கையாகவே தீ விபத்து ஏற்படவில்லை என்றும் அதனை வெடிக்க செய்திருக்கின்றதாகவும் கூறிய அவர், அப்படியென்றால் அதுவும் ஒரு தாக்குதலாகவே கணிக்கப்பட வேண்டும் எனவும் இது திட்டமிட்ட சதி என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது தீவிரவாத தாக்குதலுக்கு ஒப்பான செயற்பாடு என்பதால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன இதன்போது வலியுறுத்தியுள்ளார்.