முழுமையாக நாட்டை மூடுவதா ?

28.04.2021 11:43:42

நாட்டை முழுமையாக மூடும் தீர்மானம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிராமத்துடன் கலந்துரையாடல் என்கிற வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தார் .

அந்த நிகழ்வின் இறுதியில், அரச அதிகாரிகள் நாட்டை முழுமையாக முடக்க தீர்மானம் ஏதும் இருக்கின்றதா என வினவியபொது நாடு முழுமையாக ஒருபோதும் முடக்கப்படமாட்டாது என ஜனாதிபதி பதிலளித்ததாகவும் கூறப்படுகின்றது .

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கின்ற இடங்களை மாத்திரம் முடக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.