உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

08.04.2021 10:37:00

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் பெருந்தொற்றினால், 13கோடியே 36இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக அதிக தொற்று பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக பிரேஸில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.