'இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம்'

01.04.2023 21:08:37

தினத்தந்தி ஏப்ரல் 1, 1:45 pm (Updated: ஏப்ரல் 1, 3:59 pm) Text Size வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளஅரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்படி இந்த நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கேரளா சென்றார்.

கொச்சி விமான நிலையத்தில் கேரள மாநில தொழில்துறை மந்திரி பி.ராஜீவி, கொச்சி மாவட்ட கலெக்டர் என்.எஸ்.கே. உமேஷ் ஆகியோர் வரவேற்றனர். வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளிக்காவலாவில் உள்ள சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

"உடல் வேறு என்றாலும், எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன்.
வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டம் தான் தூண்டுகோலாக அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் துவக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்."