10 பில்லியன் ரூபாய் மோசடி சீனி இறக்குமதியில்...

08.03.2021 08:50:08

மத்தியவங்கி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் தற்போதைய அரசாங்கம் விசாரணையைத் தொடங்கத் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை தற்போது சீனி இறக்குமதியில் 10 பில்லியன் ரூபாய் மோசடிக்கு வழிவகுத்தது என அக்கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடமபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மத்தியவங்கி முறிகல் மோசடி குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது குறித்த பரிவர்த்தனையை ரணில் விக்ரமசிங்க நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் பத்திரங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிதிகளும் இன்றுவரை மத்திய வங்கியில் இருப்பதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சீனி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக இதேபோன்ற நடவடிக்கை எடுக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.