ஜூவெண்டஸ் அணி செர்ரி ஏ: நபோலி அணிக்கெதிரான போட்டியில் வெற்றி !

08.04.2021 09:41:39

இத்தாலியில் நடைபெறும் செர்ரி ஏ லீக் கால்பந்து தொடரில், நபோலி அணிக்கெதிரான போட்டியில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஜூவெண்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் ஜூவெண்டஸ் அணி சார்பில், போட்டியின் 3ஆவது நிமிடத்தில் கிறிஸ்டீயானோ ரொனால்டோ 13ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் போலோ டைபாலா 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

நபோலி அணி சார்பில், லோரென்சோ இன்சைன் போட்டியின் 90ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஜூவெண்டஸ் அணி, 59 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த நபோலி அணி 56 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.