அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

08.03.2023 15:50:05

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது