உள்ளே கொண்டாட்டம் வெளியே போராட்டம்

12.02.2023 15:23:24

"அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தினால் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை" இப்பிடி தமிழ் தரப்பு எம்.பிக்கள் தீர்மானித்திருந்தனர்.

ஆக அந்த முடிவுக்கு அமைய நேற்யை தினம் இடம்பெற்ற (11) யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளார்கள்.

இருப்பினும், நேற்று முன்தினம் இரவு இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் நடைபெற்ற விருந்துபசாரத்துடனான சந்திப்பின் பின்னர் அந்த முடிவினை சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த சந்திப்பின்போது, இணையமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தினை கையளிக்கும் வரலாற்று நிகழ்வில் அவர்களை பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி நேற்றைய யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி, அந்நிகழ்வில் சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் .

இவ்வாறு இருக்க, ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, யாழ் பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் என பலர் ஒன்றிணைந்து ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.