2ஆவது முறையாகவும் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது இங்கிலாந்து

01.05.2021 10:11:07

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை 2ஆவது முறையாக வழங்கி வைத்துள்ளன.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை), 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் லூப்தன்ஸா விமானம் டெல்லியை வந்தடைந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.