ஜனாதிபதி மற்றும் பிரதமர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்

23.02.2021 07:01:00

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிப் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியா ரம்புக்வெல்லா இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.

முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.