ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன் ?

21.02.2021 10:38:59

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சியான் 60’ படத்தில் நடிகை வாணி போஜன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது துருவ்விற்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.