இலவச தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் மே முதல் ஆரம்பம் !

23.04.2021 09:50:29

தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், மே மாதம்  முதலாம் திகதி முதல் தடுப்பூசியை வழங்குவதற்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

இதில் அனைத்து தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.