குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த புதிய வியூகம்

09.03.2023 21:55:10

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அவற்றிலிருந்து ஒதுங்கி நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த ஊரான ஊர்காவற்றுறையின் சுருவில் கிராமம் மற்றும் புளியங்கூடல், நாரந்தனை மக்களை புளியங்கூடலில் சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவகப் பிரதேசங்களில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்துவருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அவற்றிலிருந்து ஒதுங்கி நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. குறித்த வியூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்போது குற்றச் செயலலில் ஈடுபடுபவர்கள் பின்னர் கவலைப்படுவதில் அர்த்தமில்லை என்று தெரிவித்த அவர்,

இப்போதே, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

தீவகப் பகுதியில் இறைச்சிக்காக கால்நடைகளை திருடுதல், சட்டவிரோத மதுபான விற்பனையும் பல இடங்களில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்திப்பில்,

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீஸன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாவட்டச் செயலர் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திலும் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.