இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

06.06.2021 09:57:03

 

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்து 43 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 22 ஆயிரத்து 907 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 9 இலட்சத்து 53 ஆயிரத்து 480 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி முதலாவது செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஆயிரத்து 697 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 156 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ்செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.