அவலக்குரல்கைள கேட்டிருக்கின்றோம்: நவநீதம்பிள்ளை!

16.02.2021 09:30:27

மனித உரிமைகள் பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இவ்வாறு அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

 

“தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்தவித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்க கூடாது” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறு மாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

 

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

 

தமிழ்ப் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள், கோவில்கள், அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

 

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

 

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.