முதல் போட்டியில் வெற்றியை தனதாக்கிய போர்த்துகல்.... சாதனை வரலாற்றில் இடம்பிடித்த ரொனால்டோ

25.11.2022 10:00:50

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குழு எச்(H)க்கான போட்டியின்  3 ஆவது ஆட்டம் இன்று(25) இடம்பெற்றிருந்தது.

இப்போட்டியானது கத்தார் தலைநகர் தோகாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் போர்த்துகல் அணி கானா அணியை  3:2 கோல்கள் விகிதத்தில் வெற்றிக்கொண்டது.

ரொனால்டோவின் உலக சாதனை

இப்போட்டியில் முதல்பாதி வரை இரு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. எனினும் இரண்டாம் பாதியின் 65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் புகுத்தினார்.

இதன்மூலம் 5 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் புகுத்திய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ரொனால்டோ தனதாக்கிககொண்டார்.

மேலும், 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு மத்தியில் கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் புகுத்தினார்.

இதனால் கோல் எண்ணிக்கை சமநிலையை அடைந்தது. 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ரா கோல் புகுத்தி போர்த்துகலை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

போர்த்துகல் வெற்றி

 

80 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் கொன்சிகாவோ லியோ அவ்வணியின் 3 ஆவது கோலை அடித்தார்.

மேலும், 89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி, கானாவின் 2 ஆவது கோலை புகுத்தினார். இதனால் இப்போட்டியில் 3:2 கோல்கள் விகிதத்தில் போர்த்துகல் தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்தது.