இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தமிழக சட்டமன்றத்தில்தாக்கல் செய்தார் துணை முதல்வர் !

23.02.2021 07:13:06

 

தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கான செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவுத் திட்டமே இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி வரவு செலவுத் திட்டம் என்பதால் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடர் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு நடைபெறும் எனவும் அன்றைய நாட்களில் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத் தாக்கல் முடிவடைந்ததும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பார் என்பதுடன், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை உறுதிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.