அபாய அறிவிப்பை வெளியிட்டார் அம்பிகா

01.04.2023 20:48:07

அரசாங்கம் கொண்டு வரவுள்ள “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” தற்போதுள்ள தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட படுமோசமானது என கடுமையாக எச்சரித்துள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன்.

 சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த அபாய அறிவிப்பை வெளியிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இராணுவத்துக்கு மேலதிக பலம்

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மேலதிக பலத்தை வழங்குகின்றது. இராணுவம் கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது.

தற்போது உள்ள சரத்தின்படி ஒருவரை தடுத்து வைக்க பிரதி காவல்துறை மா அதிபர் அனுமதி வழங்க முடியும்,காவல் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர்ந்தால் அதனை பயன்படுத்த முடியும்.முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.

 

அதிபருக்கு மேலதிக அதிகாரம்

தற்போதுள்ள புதுச் சட்டம், அதிபருக்கான அதிகாரத்தில் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில் மேலும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். அது நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும்.

ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் முடியும். அதற்கு காவல்துறை மா அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.