டெல்லியை வீழ்த்துமா பெங்களூர் அணி ?

27.04.2021 10:00:00

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அஹமதாபாத் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பந்த்தும் பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 14 வெற்றிகளையும் டெல்லி அணி 10 வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

இரு அணிகளும் தலா ஐந்தில் நான்கில் வெற்றி என 8 புள்ளிகளுடன் டெல்லி அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திலும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.