இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

13.01.2021 11:38:00

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி திமுத் கருணாரத்ன தலைமையிலான இப்போட்டியில் ஒரு ஆண்டுக்கு பின்னர் சகலதுறை வீரரான அஞ்சலோ மத்தியூஸ் மீண்டும் அணிக்குள் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இலங்கை அணியில், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், குசால் மெண்டிஸ், ஓசதா பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, மினோத் பானுக ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அத்தோடு லஹிரு திரிமன்னே, லசித் எமபுல்தெனிய, பணிந்து ஹசரங்க, டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு குமார், விஸ்வ பெர்னாண்டோ, சமீர, சானக, அசித பெர்னாண்டோ, ரோஷன் சில்வா, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாளை வியாழக்கிழமை காலி மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.