அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

14.01.2021 10:46:37

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை யாரும் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நேற்று சென்னையில் பேசி இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதை ஏற்க முடியாது. சசிகலா வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.