வேல்ஸில் 70 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர் !

22.04.2021 10:50:18

வேல்ஸில் 70 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் முழு கொவிட்-19 தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர்.

பொது சுகாதார வேல்ஸ் புள்ளிவிபரங்கள், 75 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 92,000 பேர் இப்போது இரண்டாவது அளவு தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றன.

வேல்ஸில் மொத்தம் 1,712,372 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 622,513 பேருக்கு முழு அளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, வேல்ஷ் மக்களில் 54.3 சதவீதம் பேர் முதல் அளவு மற்றும் 19.7 சதவீதம் பேர் முழு அளவு தடுப்பூசி பெற்றுள்ளனர்.