யாழ்.தொண்டமானாறு கடலில் நீராடச்சென்ற சிறுவன் மூழ்கிப் பலி

22.02.2021 08:30:39

யாழ். தொண்டமானாறு சிறு கடற்பரப்பில் ஊரவர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியானார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், உடுப்பிட்டியைச் சேர்ந்த நல்லைநாதன் பிரகாஸ் (வயது 17) என்பவரே உயிரிழந்தவராவார்.

நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி சிறுவன் காணாமல் போயுள்ளான்.
இதையடுத்து ஊரவர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து தேடியுள்ளனர்.
சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்தின் பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

உடனடியாக அவரை ஊறணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்,
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர் தெரி
வித்தார்.