இயந்திரங்கள் செயலிழப்பு - நாட்டைக் கட்டியெழுப்புவது எப்படி..!

19.03.2023 15:21:29

ஒரு நாட்டை இயக்குவதற்கான அனைத்து இயந்திரங்களும் இயங்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

முறையான வேலைத்திட்டத்தின் மூலமே வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,

“நாடு முழுவதும் கடுமையான அசாதாரண நிலைமை ஏற்பட்ட போது நாட்டின் அதிகாரத்தை பொறுப்பேற்ற அதிபர் ரணசிங்க பிரேமதாச, ஜனசவிய போன்ற பொது நலத்திட்டங்களையும் ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்தார்.

சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்த தரப்புமோ ஜனசவிய போன்றவற்றை குறைப்புச் செய்யுமாறு எதுவும் கோரப்படவில்லை.

நாற்பத்து மூன்று இலட்சம் பிள்ளைகளுக்குக் கொடுத்த மதிய உணவை குறைக்குமாறு கோரவில்லை. சீருடைகளை வழங்குவதை தடை செய்யுமாறு கோரவில்லை.

மின் கட்டண அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான சரியான பேச்சுவார்தைகளே அதற்கு காரணம். இன்று அது முறையாக நடக்காததுதான் காரணம்.

மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த   எதிராக மின் கட்டணத்தை செலுத்தாத நிலைக்கு செல்ல வேண்டும்” - என்றார்.