"சிறந்த நடைமுறைகள் 2022" ஐரோப்பிய விருது ரணிலிடம்

31.03.2023 16:25:13

"சிறந்த நடைமுறைகள் 2022" ஐரோப்பிய விருதை வென்ற பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம் தனது விருதை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.

இலங்கையில் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிதித் தீர்வுகளை வழங்கும் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்திற்கு, சிறந்த நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய சமூகத்தின் தர ஆராய்ச்சி (European Society Quality Research – ESQR) வருடாந்தம் வழங்கும் "சிறந்த நடைமுறைகள் 2022" (Best Practices 2022) விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழா

 

2022 டிசம்பர் 11, அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டதுடன் அது சமீபத்தில் அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.இன் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம் மற்றும் பீப்பிள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமீந்திர மாசெர்லின் ஆகியோர் அதிபரிடம் விருதினைக் கையளித்தனர்.