சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்: முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. பின்னிலை !

02.05.2021 11:24:17

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தமிழகத்தில் 234 தோகுதிகளில் இதுவரையான நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 149 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 84 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

அத்துடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான முதற்கட்ட முடிவுகளின் படி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி எட்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி மூன்று தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் ஒர இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதேபோல், அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான முதற்கட்ட முடிவுகளின்படி, பா.ஜ.க. கூட்டணி 78 இடங்களிலம் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும் ஏகைன கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதனைவிட, கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்குமான முதற்கட்ட முடிவுகளின் படி, சி.பி.எம். கூட்டணி 90 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 44 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி மூன்று தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதேவேளை, மேற்கு வங்காளம் மாநிலத்தில் 292 தொகுதிகளுக்குமான முதற்கட்ட முடிவுகளின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன் பா.ஜ.க. கூட்டணி 83 இடங்களிலும் சி.பி.எம். கூட்டணி ஒரு இடத்திலும் ஏனைய கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.