ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்

14.01.2021 10:49:32

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் விளைவிக்கக் கூடியது என முதலில் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். கலாச்சாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை. அவர்களுக்கு எதிராக சதி செய்கிறது. பிரதமர் மோடி, நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.