மாகாண சபை தேர்தல் முறை; மூவரடங்கிய குழு நியமனம்

12.01.2021 16:22:50

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகளுக்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே மற்றும் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைசார் அமைச்சர் ஜனக்க பண்டாரவினால் இந்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.